Mar 302024

பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் நாம் தமிழர் கட்சியின் ஒலிவாங்கிச் சின்னம் | கவன ஈர்ப்பு நிகழ்வு | 2024.03.31

அனைத்துத் தாய்த்தமிழ் உறவுகளுக்கும் வணக்கம்🙏
பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையம் இணைந்து செய்த திட்டமிட்ட துரோகத்தால்  நமது நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை இழந்திருக்கின்றது.
என்ன துரோகம் நிகழ்ந்தாலும் அதை முறியடித்து,  மீண்டெழும் ஆற்றல், வீரம், விவேகம் நம் அண்ணனிடம் - அமைப்பிடம் - தமிழர்கள் நம்மிடம் உறுதியாக உண்டு!

"நமது புதிய சின்னத்தை என்னென்ன வழிகளிலெல்லாம் கொண்டு சேர்க்கலாமோ  அந்தந்த வழிகளில் உலகத் தமிழர்களே கொண்டு சேருங்கள்" என்ற அண்ணனின் அன்பான கட்டளையை ஏற்று
2019 ஆம் ஆண்டு முதன் முறையாக நம்மிடம் விவசாயி சின்னம் வந்த போது அதனை பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன்பாக வைத்து இதுதான் தமிழர்களின் சின்னம் எனப் பேரறிவிப்பு செய்ததை போல,
இம்முறையும் செய்யலாம் என்று கருதுகிறோம்.
 அவ்வாறு செய்வதை சமூக வலைத்தளங்களின் வாயிலாக தமிழகத்தின் கடைக்கோடி கிராமம் வரை கொண்டு சேர்க்கலாம் என நம்புகின்றோம்.
அந்த வகையில் இந்த நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை 3:00 மணியிலிருந்து 5:00 மணி வரை பிரித்தானிய பாராளுமன்றத்தின் முன் இடம்பெறும்.

வாய்ப்புள்ள உறவுகள் குடும்பம் குடும்பமாக இந்த ‘ஒலிவாங்கிச் சின்னம் பரப்புரை’ நிகழ்வில்  கலந்து கொண்டு நாம் தமிழர் கட்சியின் வெற்றிக்குத் துணை நிற்குமாறு அன்புரிமையோடு கேட்டு கொள்கிறோம்.

இடம்:
பிரித்தானியப் பாராளுமன்றச் சதுக்கம்
Parliament Square, London, SW1P 3JX.

நாள்:
31.03.2024 ஞாயிறு

நேரம்:
மாலை 3:00 தொடக்கம் 5:00 மணிவரை

தொடர்புகளுக்கு:
07459315674 | 07931111076

"இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை"

நாம் தமிழர் பிரித்தானியா