ஆரணி மக்களவை தொகுதி வேட்பாளரை ஆதரித்து பரப்புரை செய்த சீமான், "தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி அமைத்து வரி வசூலிக்கிறார்கள். அதோடு, வாகனம் வாங்கும் போதும் வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை வைத்து சாலை அமைக்க வேண்டியதுதானே.
சாலையை கூறு போட்டவர்கள் நாட்டையும் கண்டிப்பாக கூறு போடுவார்கள். சலுகை, போனஸ், மானியம், இலவசம் இதை தவிர வேறு எதையும் பார்க்க முடியாது. ரூ.1000 -க்கு கையேந்த வைப்பது தான் திராவிட மொடலின் சாதனை.
அருணாச்சல பிரதேசத்தை ஆக்கிரமித்த சீனா, பெயர் பலகையை சீன மொழியில் வைத்துவிட்டது. அங்கு இருப்பவர்கள் சீனாவுக்கு செல்ல பாஸ்போர்ட் தேவையில்லை என்று கூறப்பட்டுள்ளது. நான் அருணாச்சல பிரதேசம் சென்று, அங்கிருந்து சீனாவுக்கு சென்றுவிடலாம் என்று நினைக்கிறேன்" என்று கூறியுள்ளார்.